மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது நடவடிக்கை
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகமொன்று தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் உணவு பொருட்களில் ஈக்கள் காணப்பட்டுள்ளதுடன், உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு இடங்களிலும் சுகாதார குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதாரமற்ற குளிர்சாதன பெட்டிகளில் உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டமை, உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை காதாரமான முறையில் பராமரிக்காமை மற்றும் கழிவு நீரை முறையற்ற வகையில் வெளியேற்றுதல் உள்ளிட்ட குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு
அத்துடன், உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் உரிய தனிநபர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமையும் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த உணவகத்துக்கு எதிராக இதற்கு முன்னரும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உணவு கையாளும் நிறுவனங்கள் செயற்படுவதை தடுக்கும் நோக்கில், உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



