சம்மாந்துறையில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது
சம்மாந்துறையில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam