மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழரசு கட்சி தரப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பில் இரா. சாணக்கியன் தலைமையில் இன்று (10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள்
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில், ஞானமுத்து சிறிநேசன், மட்டு மாநகரசபை முன்னாள் மேஜர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி உட்பட 8 பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.
இதற்கமைய, இவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள வேட்பு மனுதாக்கல் செய்யும் காரியலத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலதிக தகவல் - குமார்
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri