அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல்
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி அமைக்கும் வகையில் தமது கட்சி இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளின் உதவி இன்றி தனியாக தீர்மானம் எடுக்கக் கூடிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும் என விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
