பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
யாழ். மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
புதிய வேட்பாளர்கள்
அத்துடன், எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும், மத்திய குழு மற்றும் உயர்பீட அரசியல் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சிறீதரன் தவிர ஏனைய எட்டுப் பேரும் சுமந்திரன் அணியைச் சார்ந்தவர்கள் என்றும் அதில் சுயாதீனமான அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்போ அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களோ அல்ல என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், கட்சியில் பெண் ஆளுமைகள் பலர் இருக்கின்ற போது கட்சிக்கு யார் என்று தெரியாத பெண்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்கியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தீவக தொகுதி தலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையனும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி இன்றையதினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், சுமந்திரன் அணியின் வேட்புமனுவாகவே இதை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



















16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
