நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பொறுப்பு: சிறீநேசன் விளக்கம்
தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று (09.10.2024 மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுமக்கள் கட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரின் சின்னமாக இருந்த சங்கு சின்னம் இப்போது ஒரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளது.
குழப்பம் அடைய வேண்டாம்
எனினும், தமிழ் மக்கள் குழப்பம் அடையாமல் இந்த முறை தமிழரசுக் கட்சி என்ற அடிப்படையில் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்பதை மிகவும் அர்த்தம் சக்தியுடன் நான்
கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தமிழரசு கட்சி தமிழரசு கட்சியாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடுகின்றது” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        