தமிழரசுக் கட்சியில் முடிவுக்கு வரும் சிக்கலுக்குரிய முக்கிய விவகாரம்
2009 ஆம் ஆண்டிற்கு பின் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக காணப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி என்பன மந்தமான பின்னடைவை சந்தித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை என கிளிநொச்சிக் கோட்டக் கிளையின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியை பலப்படுத்தி தாயகத்தின் ஒரு சக்திவாய்ந்த விடுதலை இயக்கமாக கட்டி எழுப்புவதே புதிய தலைவரான சிவஞானம் சிறீதரனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி இன்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக மாறி உள்ள நிலையே தலைவர் தேர்தலுக்கு உந்துதல் சக்தியாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |