தமிழ் மக்களுக்கு ஆபத்தாக மாறவுள்ள புதிய சட்டமூலம் : சபையில் பகிரங்கப்படுத்தும் சாணக்கியன்
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தமிழ் மக்களுக்கு ஆபத்தாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (24.01.2024) நடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான விவாதத்தின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ஊடாக நாங்கள் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் ஒரு பிரச்சினைக்கு எதிராக பாரிய கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தால் அந்த அறிவித்தல் கொடுப்பவரை கைது செய்யலாம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
அதே போல தான் நாங்கள் 15 வருடங்களாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 2000 இற்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் இந்த நிகழ் நிலை காப்பு சட்டம் மூலத்தை நடைமுறைப்படுத்துவதனுாடாக அரசாங்கத்தினால் கைது செய்ய கூடிய நிலை காணப்படுகின்றது.
மயிலத்தமடு மாதவனையிலே சட்டவிரோதமான குடியேற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது அனைவருக்கும் பகிரங்கமாக தெரிந்த ஒரு விடயம்.
இந்த விடயமானது எங்களுடைய வடக்கு, கிழக்கு மக்களுடைய விகிதாசாரத்தை மாற்றும் என அறிவித்தால் அது கூட இந்த நிகழ் நிலை காப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குற்றமாக கருதப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |