நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய உறுதிமொழி
புதிய இணைப்பு
போராட்டச் சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 5 பொலிஸ் நிலையத் பொறுப்பதிகாரிகளுக்கு முன்னைய பொலிஸ் நிலையங்களுக்கு இணையான பொலிஸ் நிலையங்கள் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைய இன்று (05) காலை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே இதனை கூறியுள்ளார்
இது தொடர்பான மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்காக நீதிமன்றில் முன்னிலையான பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஊடாக நீதிமன்றத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்,(IGP Deshabandu Tennakoon) நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைய இன்று (05) காலை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நேற்று விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அடிப்படை உரிமைகள் மனு
‘அரகலய’ ஆர்பாட்டத்தை தொடர்ந்து பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக ஐந்து தலைமை ஆய்வாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை விசாரிக்க நீதிமன்றினால் குறித்த அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் சம்பவங்களை முன்வைத்ததையடுத்து, பொலிஸ்மா அதிபரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
