மட்டக்களப்பில் செந்தில் தொண்டமான் தலைமையில் விசேட இப்தார் நிகழ்வு
மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களுடன் விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22.03.2024) நடைபெற்றுள்ளது.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு
ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகிறது.
பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத் துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் இஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்தார் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காசா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |