இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர : எதிர்க்கட்சி சவால்

Anura Kumara Dissanayaka President of Sri lanka NPP Government
By Rakesh Jun 11, 2026 02:44 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசின் தவறான நிதி நிர்வாகம் மற்றும் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இயலாவிட்டால் அநுர பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(10.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வசமாக சிக்கிய கோட்டாபய! ஆபத்தில் சுரேஷ் சலே - குடும்பத்தினரின் பின்னணியில் யார்..!

வசமாக சிக்கிய கோட்டாபய! ஆபத்தில் சுரேஷ் சலே - குடும்பத்தினரின் பின்னணியில் யார்..!

நிதி எங்கே போனது....

மேலும் தெரிவிக்கையில், "முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்புகள் முற்றாக இல்லாத நிலை காணப்பட்டது.

எனினும், ரணில் விக்ரமசிங்க தனது அரசைத் தேசிய மக்கள் சக்தி அரசிடம் ஒப்படைக்கும் போது, மகா திறைசேரியில் 800 பில்லியன் ரூபா கையிருப்பு இருந்தது.

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர : எதிர்க்கட்சி சவால் | If Not Possible President Anura Should Resign

தற்போதைய அரசு அதனை ஒரு வருடத்துக்குள் 900 பில்லியன் ரூபாவாக உயர்த்தியதாக எண்களைக் காட்டிப் பிரசாரம் செய்திருந்தாலும், தற்போது மகா திறைசேரியின் கையிருப்பு 620 பில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 986 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது.

எனினும், அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை. டொலரின் மதிப்பைச் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மே மாதத்தில் மாத்திரம் 223 மில்லியன் டொலர்கள் அரசின் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

அரசு தமக்கிருந்த ரூபா கையிருப்பையும் அழித்து, வாகன இறக்குமதி மூலம் கிடைத்த பாரிய வரி வருமானத்தையும் வீணடித்துள்ளதுடன், இந்த நிதியைக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

மின்சார சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியவற்றுக்கு தலா 20 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட போதிலும், அவை உள்ளிட்ட கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம், சீனித் தொழிற்சாலை என்பன தற்போதைய ஆட்சியில் பாரிய நட்டத்தையே எதிர்நோக்கியுள்ளன.

அரசுக்கு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை! புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பின்தள்ளிய வீரர்

உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை! புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பின்தள்ளிய வீரர்

பதவியை விட்டு விலகுவதாகக் கூறிய வாக்குறுதி

நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் மூலம் நாட்டின் சட்ட நிர்வாகம் திட்டமிட்டு முடக்கப்பட்டு, தேர்தல் செயல்முறைகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர : எதிர்க்கட்சி சவால் | If Not Possible President Anura Should Resign

நாட்டின் ஜனநாயகம், சட்ட ஒழுங்கு, எரிபொருள் விலை மற்றும் ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தம்மால் இயலாவிட்டால் பதவியை விட்டு விலகுவதாகக் கூறிய வாக்குறுதிக்கு இணங்க உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லாது இன்னும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான காரணத்தை நாட்டுக்கு அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பலாத்காரமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு காண்கின்றார். எனவே, ரில்வின் சில்வா கூறுவதையா அல்லது தான் நாட்டுக்குக் கூறிய வாக்குறுதியையா ஜனாதிபதி செய்யப் போகின்றார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் 

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது.

இந்த விவகாரம் அரசியல் நாடகமாக்கப்படுவதால் பிரச்சினை அதிகரித்துள்ளதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர : எதிர்க்கட்சி சவால் | If Not Possible President Anura Should Resign

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு சிறைச்சாலையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகவும், அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக எதிர்க்கின்றது. சுரேஷ் சலே தவறு செய்திருந்தால் அவருக்குச் சட்டப்படி முறையான விசாரணை மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே அரசும் எதிர்க்கட்சியின் ஒரு குழுவும் இணைந்து தயாரித்த திரைக்கதைக்கு இணங்க அவரை குற்றவாளியாக்க முயல்கின்றனர்.

அரசிடம் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்று உள்ளது. கைதிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் அநாகரிகமான சித்திரவதைகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முட்டுக்கட்டை போடாது. ஆனால், விசாரணைகள் நியாயமான முறையில் அமைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US