ஐசிசி செம்பியன்ஸ் கிண்ணம் : அரையிறுதி போட்டிகளின் விபரம் வெளியானது
சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் (ICC) செம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி போட்டிகளின் விபரம் அறிவிக்கப்பட் டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை துபாயில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
நேற்றைய குழு லீக் போட்டி
வியாழக்கிழமை அன்று, லாகூரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற குழு லீக் போட்டியில், இந்திய அணி, 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 249 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
