கணவனின் கொடூர செயல் : கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட மனைவி
கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(18.06.2026) பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபானம் அருந்தியிருந்த கணவன்
இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்றைய தினமும் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்த கணவன், வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து மனைவியின் உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
அவசரத் தகவலின் அடிப்படையில்
கத்திக் குத்துக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அயலவர்கள் வழங்கிய அவசரத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், கொலையாளி எனக் கருதப்படும் 48 வயதுடைய கணவனை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் கடுமையான மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri