இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதம்! மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கணவன்
காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்
கணவன் கைது
நேற்று இரவு (18) மதுபோதையில் வீட்டுக்கு திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் பிள்ளைகளின் கண் முன்பாகவே மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri