நேற்றிரவு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் - விசாரணையில் வெளியான தகவல்
பாணந்துறை பகுதியில் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் 18 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பல தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று இரவு (18) கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 18 கிலோகிராம் (716 கிராம்) ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவை கைப்பற்றப்பட்டிருந்தன.
பாணந்துறை, அலுபொமுல்லா பகுதியை சேர்ந்த 26 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல்
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ், இந்த போதைப்பொருள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் மற்றும் கடத்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேகநபர் இன்று (19) பாணந்துரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கமைய, மேலதிக விசாரணைக்காக 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் திக்பிட்டிகொட பகுதியில், 2 கிலோகிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று இரவு பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு விசாரணை
அதே நேரத்தில், சந்தேகநபரிடமிருந்து 5,000 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், திக்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan