கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பெரும் சிரமத்திற்குள்ளாகும் மக்கள்
திருகோணமலை - கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இரவு நேரத்தில் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் பல தென்னை மரங்களையும், வாழை, முதலான பயிர்களையும் துவம்சம் செய்து உள்ளதோடு, ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம் செய்துள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் மனிதன் யானை - மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.
தொடர் சேதங்கள்
அந்த வகையில், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள் தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், வீடொன்றையும் துவம்சம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
அதேவேளை பல தென்னை மரங்களையும், வேளாண்மையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். யானையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ”ஒரு ஏக்கர் வயல் நிலம் நாசமாக்கி விட்டது. இந்தப் பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது. இது எங்களுடைய வாழ்வாதாரம் தென்னை, முதலானவற்றையும் அழித்து விடுகின்றன. ஒவ்வொரு இரவும் யானை வந்து இவ்வாறான நாசத்தை செய்கின்றது.
இரவு நேரங்களில் எங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் வெளியில் செல்ல முடியாது. இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
