கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு
24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக இரண்டு மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் நேற்று(07.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் சோதனைச் சாவடி
அத்துடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை மூன்று வேலை நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தினை செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடவுச்சீட்டு பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை நிறுவுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
