ஹிருணிக்காவின் கைது அடிப்படை மனித உரிமை மீறல்: சஜித் கண்டனம்
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் கைது அடிப்படை மனித உரிமை மீறல் என்று சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் துறைமுகத்தின் உள்ளே இருக்கும் பொலிஸ் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அடிப்படை உரிமை மீறல்

அவர்களைப் பார்வையிட்டு சட்ட உதவிகளை வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஹிருணிக்காவின் கைது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இது அடிப்படை உரிமை மீறல் சம்பவமாகும்.
கண்மூடித்தனமாகவும் , சட்டங்களை மீறும் வகையிலும் இந்த துர்நாச அரசாங்கம் இவர்களைக் கைது செய்துள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா குழுவினர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan