ஜனாதிபதி மாளிகை முன் ஹிருணிக்கா கைது! நாடாளுமன்றில் கண்டனம் தெரிவிப்பு
ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமையானது கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது என்று ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிருணிக்காவின் போராட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அதன் பின்னர் முகங்களை மறைத்த விசேட படையணி களத்தில் இறக்கப்பட்டு, சுற்றி வளைக்கப்பட்ட ஹிருணிக்கா குழுவினர் கரையோரப் பொலிஸ் நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது குறித்து கண்டனம்
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வைத்து, ஹிருணிக்காவின் கைது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்துகின்றமை போன்ற விடயங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.