அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் நீரில் அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட பின்னர், கடற்படைக்குச் சொந்தமான ஐரிஸ் தேனா என்ற கப்பல் இலங்கையின் தெற்கே நீரில் மூழ்கியது.
180 பேர் கொண்ட இந்தக் கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் இராணுவப் பயிற்சியில் பங்கேற்று, ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் "சர்வதேச நீரில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பலை" அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் நேற்று உறுதிப்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி கப்பல் டார்பிடோவின் உதவியுடன் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா இந்த தாக்குதலைக் காட்டும் காணொளியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam