காலி கடற்கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்த ஈரானிய கப்பல் - இலங்கையின் அறிவிப்பு
காலி கடற்கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்த ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் தேனாவில் 180 பேர் இருந்ததாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்று (04.03.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது கராபிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பொறுப்பு
சம்பந்தப்பட்ட கப்பல் இலங்கை கடல் பகுதியில் இல்லை என்றாலும், உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பொறுப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச மரபுகளின்படி இந்த விவகாரம் கையாளப்பட்டு வருகிறது. இன்று காலை 5.08 மணியளவில் சம்பந்தப்பட்ட கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு கிடைத்த செய்தியைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.