ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக தங்களது ராணுவ பதிலடி நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிதானுடன் தொலைபேசி உரையாடலில் இதை தெரிவித்துள்ளார்.
ராணுவ பதிலடி
“எதிரிகளின் தீமையை முற்றிலும் தடுக்கும்வரை ஈரானின் ஆயுதப்படைகள் நடவடிக்கையை நிறுத்தமாட்டார்கள்” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்கள், நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட தளங்களை மட்டுமே இலக்கு செய்கின்றன என்றும், அவை சர்வதேச சட்டத்துக்கு அமைவதாகவே இருப்பதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri