ஹிருணிக்கா குழுவினர் பிணையில் விடுதலை
ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா குழுவினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திர குழுவினர் கைது செய்யப்பட்டதும் சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாக அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முன்வந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சட்டத்தரணிகளுடன் நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று தேவையான சட்ட உதவிகளை மேற்கொண்டனர்.
பிணையில் விடுதலை
இந்நிலையில் ஹிருணிகா குழுவினர் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் ஹிருணிக்காவின் திருமண வாழ்வுக்கு ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், கைது செய்யப்பட்டிருந்த தன் மனைவி அருகே பிணை கிடைக்கும் வரை ஹிருணிக்காவின் கணவர் காத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
