அமெரிக்காவில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கிரீன்வுட் நகரில் இந்து மத வழிபாட்டு தலமான சுவாமி நாராயண் கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலானது நேற்றுமுன்தினம்(12) இடம்பெற்றுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவில் சுவரில் கருப்பு மையால் அவதூறு கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த முறைபாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 5 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
