வடகொரியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம்பெண்!
உலகில் பல நாடுகள் இருந்தாலும் சில நாடுகள் அவர்களது செயற்பாட்டால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
அந்தவகையில், வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது சர்வாதிகார ஆட்சியால் பெரிதும் பேசபடுபவர்.
முதல் பெண் தலைவர்
கடந்த சில மாதங்களாக, வடகொரியாவில் ஒரு இளம்பெண் கவனம் ஈர்த்து வருகிறார்.
இராணுவ நிகழ்ச்சிகள், அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் முக்கிய விருந்தாளியாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் அவர் பங்கேற்று வருகிறார்.
அந்த இளம்பெண், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ ஏ (Kim Ju Ae) ஆவார். எதிர்காலத்தில் ஒரு நாள் அவர் வடகொரியாவின் தலைவராக, அதுவும் கிம் குடும்பத்திலிருந்து வடகொரியாவை ஆளும் முதல் பெண் தலைவராக ஆவார் என கருதப்படுகிறது. வடகொரியாவை இதுவரை பெண்கள் யாரும் ஆண்டதில்லை.
அரசியல் வல்லுநர்களின் கருத்து
கிம் அரசாங்கத்திலேயே கிம் ஜாங் உன்னுடைய சகோதரியான கிம் யோ ஜாங் (Kim Yo Jong) மட்டுமே இதுவரை முக்கிய பொறுப்பொன்றை வகிக்கிறார்.
ஆக, பெண் ஆட்சியாளர்களுக்குப் பழகாத வடகொரியாவை, அடுத்து ஆளப்போகிறவர் தன் மகள் என்னும் விடயத்தை அழுத்தமாக பதிவு செய்வதற்காகவே கிம் ஜாங் உன் தன் மகளை, இராணுவ நிகழ்ச்சிகள், அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் பங்கேற்க வைக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கேற்ப, கிம் ஜூ ஏ தன் நடை உடை பாவனைகளில், ஏன் கைதட்டும் முறையில் கூட மாற்றங்களைக் காட்டிவருகிறார் என்று கூறப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா





இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri
