கொட்டும் மழையிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மலையக மக்கள்!

Diwali Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lanka Government Hatton
By Malaivanjan Nov 07, 2026 07:59 AM GMT
Report

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழைக்கு மத்தியிலும், தீபத்திருநாளான தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக மலையக மக்கள் தயாராகி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்தும் நகர்ப்புறங்களிலிருந்தும் பெருமளவிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, ஹட்டன் நகரில் இன்று(07.11.2026) காலை முதல் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதுடன், இதன் காரணமாக நகரின் பிரதான வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

கொட்டும் மழையிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மலையக மக்கள்! | Hill Country People Preparing For Deepavali

இதற்கிடையில், பாதசாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகப் பொருட்களை ஹட்டன் - டிக்கோயா நகர சபை அதிகாரிகள் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கனமழையுடன் தீபாவளி கொண்டாட்டம்

எனினும், கடந்த வருட தீபாவளியுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஹட்டன் நகரில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்த மக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பொருட்களின் விலையேற்றம் மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை ஆகியன இதற்கான காரணங்களாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கொட்டும் மழையிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மலையக மக்கள்! | Hill Country People Preparing For Deepavali

மேலும், நகருக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஹட்டன் பொலிஸார் அதிகளவில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பொதுமக்களின் போக்குவரத்து வசதியைக் கருத்திற்கொண்டு பல விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக மலையக மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கொட்டும் மழையிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மலையக மக்கள்! | Hill Country People Preparing For Deepavali

கொட்டும் மழையிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மலையக மக்கள்! | Hill Country People Preparing For Deepavali

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்! இலங்கையில் ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்! இலங்கையில் ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பு வெள்ளத்தில் அநுரவுக்கு சாபம்! கோட்டபாயவின் விசுவாசியின் குமுறல்

கொழும்பு வெள்ளத்தில் அநுரவுக்கு சாபம்! கோட்டபாயவின் விசுவாசியின் குமுறல்

YOU MAY LIKE THIS





1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US