மத்திய கிழக்கில் உச்சமடையும் பதற்றம் - சர்வதேச சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் மோதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் மசகு எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.4% உயர்ந்து 117.64 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WTI மசகு எண்ணெய், 2.1% உயர்ந்து 104.12 டொலராகப் பதிவாகியுள்ளது.
எண்ணெய் விலை அதிகரிப்பு
ஒட்டுமொத்தமாக, ஒக்டோபர் மாதத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 14% உயர்ந்துள்ளதுடன், WTI விலை 15% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று வெடிபொருட்களுடன் வந்த சிறிய படகினால் தாக்கப்பட்டதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சவூதி அரேபியாவின் ராஸ் தனூரா மற்றும் ரபிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலும் எண்ணெய் விநியோகமும் அதிகரித்துள்ளது.