கோட்டாபயவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசின் நிர்வாக அணுகுமுறை
"தற்போதைய அரசின் நிர்வாக அணுகுமுறை முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களுக்குத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராகக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எந்நேரத்திலும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
கடந்த கால கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெடித்ததை போன்றதொரு மக்கள் எழுச்சிப் புரட்சிக்குரிய சூழல் தான் தற்போது இலங்கையில் உருவாகி வருகின்றது.
இந்த நிலவரம் குறித்த புலனாய்வுத்தகவல்களை அரசு முன்கூட்டியே அறிந்திருக்கக்கூடும் என்றார்.
அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்பு குரல்கள்
அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டங்களின் உண்மையான நோக்கம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "மக்கள் மத்தியில் எழும் இத்தகைய கோபத்தையும் போராட்டங்களையும் முறியடிப்பதற்காகவே 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் அவசரமாகக் கொண்டுவரப்படுகின்றன.
எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்வருபவர்களைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலம், அரசுக்கு எதிராக எழும் எத்தகைய எதிர்ப்புக் குரல்களையும் முற்றிலுமாக ஒடுக்குவதே ஆட்சியாளர்களின் பிரதான நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.