நாளை முதல் கட்டாயம்! இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் நாளை (01) முதல் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல், வணிகத்தைப் பதிவுசெய்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கட்டப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் அறிவுறுத்தல்
இதற்கமைய, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட SEC/2026/E/07 என்ற சுற்றறிக்கையின் படி, எந்தவொரு வங்கி கணக்கை திறக்கும்போதும் மற்றும் கடன் அட்டை பெறும்போதும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) குறிப்பிடும் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று இலங்கை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த புதிய விதிமுறை 01 நவம்பர் 2026, அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே இலங்கை வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும், தமக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) புதுப்பித்துக்கொள்ளுமாறு மேலும் கேட்டுக்கொள்கின்றது.
மக்கள் வங்கியின் அறிவுறுத்தல்
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, பல வங்கி பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

TIN சான்றிதழின் நகலை ஒக்டோபர் 31, 2026, இன்றிற்குள் அருகிலுள்ள மக்கள் வங்கி கிளைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வங்கிக் கணக்கைத் திறக்கும்போதும் மற்றும் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போதும் இந்த TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறை நவம்பர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
எனவே, நாளை (01) முதல், கணக்குகளைத் திறப்பதற்கும் மற்றும் கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் TIN சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என வங்கிகள் அறிவித்துள்ளன.
