இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி
இலங்கை கிரிக்கட் அணியின் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாதுறை தூதுவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்க தீர்மானம்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சனத் ஜயசூரியவை சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாயக்கிழமை இது தொடர்பிலான விசேட நிகழ்வு ஒன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய உலக அளவில் பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சனத் ஜயசூரிய இதுவரையில் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
