லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு பொலிஸார்
பாரிய தீ விபத்திற்கு பின்னர் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறங்கியுள்ள நிலையில், அங்கு பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமான நிலையம் இன்றையதினம்(21.03.2025) மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையதினம் விமான நிலையத்தை முழுமையாக திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
எனினும், விமான நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் விமான நிலையத்திற்கு செல்ல கூடாது.
Flights have resumed at Heathrow Airport after a 16-hour closure caused by a fire at a substation. pic.twitter.com/xJJYYfbCll
— Geopoliti𝕏 Monitor (@DalioTroy) March 21, 2025
விமான நிலையத்தின் மேலதிகாரி தோமஸ் வோல்ட்பை, பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டதோடு இது விமான நிலையம் எதிர்கொண்ட மிகப்பெரிய விபத்து எனக் கூறியுள்ளார்.
இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையிலும் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விமான நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ Cineulagam

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
