பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
புதிய இணைப்பு
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணிநேரங்கள் மற்றும் அதற்குப் பிறகும் பயணிகளின் பயண விருப்பங்கள் குறித்து விரைவாகப் புதுப்பிப்பதற்கு விமான நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித்தளங்கள் அறிவித்துள்ளன.
இதற்கமைய, விமான நிலையத்தையும் பேடிங்டன் நிலையத்தையும் இணைக்கும் ஹீத்ரோ எக்ஸ்பிரஸ், இன்று இரு திசைகளிலும் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம், இன்று நள்ளிரவு வரை மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீர் தீ விபத்து
இதனால் ஏற்பட்ட மின் தடை காரணமாக விமான நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, ஹீத்ரோ விமான நிலையம் இன்று நள்ளிரவு 23.59 மணி வரை மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
So I read all over Russian news that a giant fire in substation near the Heathrow airport in the UK left the airport closed and thousands of people without power.
— Kvist (@kvistp) March 21, 2025
Russian telegram news sure do have a lot of footage of it, they're fast, even though it's night there, weird.... pic.twitter.com/UQMt9DYoEn

வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
