11 ஆண்டுக்கு முன் மாயமான விமானத்தை மீண்டும் தேடும் மலேசியா
11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய(Malaysia) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8ஆம் திகதி புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட எம்.எச்.370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
எம்.எச்.370 விமானம்
227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
விமானம் பயணித்த 1 மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம்(Vietnam) வான்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்கவில்லை.
மலேசிய அமைச்சரவை
இந்நிலையில், 11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முறை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்காக பிரித்தானியாவில் செயல்படும் ஒரு நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
