சுமந்திரனை ஒதுக்கி யாழ். மேயர் கலந்துரையாடல்
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும்போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல“ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 5 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam