பாகிஸ்தான் - இந்திய யுத்தத்தில் பிரான்ஸ் உளவுத் துறையின் அதிர்ச்சி தகவல்
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒப்பரேசன் சிந்தூர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தன்னிச்சையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்தியர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 இடங்களில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தநிலையில், சுட்டு வீழ்ந்த விமானங்களில் ரபேல் விமானம் விழுந்ததை பிரான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இராணுவ ஆய்வாளர் அரூஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
