இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம்! விளக்கமளித்த அரசாங்கம்
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, மாறாக பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது என்றும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல் அறியும் சட்டம்
தேவைப்படுபவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அதைப் பெறலாம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், தொடர்புடைய ஒப்பந்தங்கள் உரிய நேரத்தில் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்துகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




