பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அறிவுறுத்தல்
பாடசாலை மாணவர்கள் மத்தியிலான தொற்றாத நோய் பிரச்சினைகள் பாரியளவில் அதிகரித்து வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் ருவந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களிடையே தொற்றாத நோய்கள், குறிப்பாக 2ஆம் வகையை சேர்ந்த நீரிழிவு நோய்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வயதிற்குட்பட்ட மாணவர்கள், பரந்த அளவிலான சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இந்நிலைமை சுகாதார நிபுணர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொற்றா நோய்கள்
அத்துடன், இம்மாணவர்கள் மத்தியில் கல்லீரல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்நிலைமைகளும் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ருவந்தி எச்சரித்துள்ளார்.
எனவே, இந்நோய் நிலைமைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மாணவர்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சுகாதார பிரச்சினை அதிகரிப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |