இலங்கை மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் மக்கள் தொகை தோராயமாக 2,64,950 ஆல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடிசன மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் மூலம் இது வெளியிடப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர் வசந்த அதுகோரலவுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
அதற்கமைய 2021-2022 காலகட்டத்தில் இலங்கையின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 22.181 மில்லியனாக இருந்தது. 2021-2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச மக்கள் தொகையாக அது பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாத்திற்கிடைப்பட்ட காலப்பகுதியில் மக்கள் தொகை 22.37 மில்லியன் வரை குறைந்துள்ளது.
அதற்கமைய, 1,44,395 பேர் குறைந்துள்ளனர். மேலும், 2023ஆம் ஆண்டு ஜூன் மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 21.916 மில்லியனாக மேலும் குறைந்துள்ளது.
இடம்பெயர்வு
முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, இந்த காலகட்டத்தில் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 1,20,055 குறைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது -0.7க்கு அருகில் உள்ளது.
இந்த மக்கள்தொகை சரிவுக்கு பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட விரைவான சரிவு மற்றும் நிகர இடம்பெயர்வில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
