ஹரிணியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறி கடுமையாக எச்சரித்த தேரர்!
திருமணமாகாத பெண்மணி என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய உங்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கனவு மற்றும் எமது நாட்டின் பாரம்பரிய கலாசாரம் தொடர்பாக எமக்கிருக்கும் வேதனை உமக்கு தெரியாது என ஜனசெத்த பெரமுனவின் தலைவர் சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
புதிய கலாசாரம்
தொடர்ந்துரையாற்றிய அவர்,''ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால் எல்லாவிடயங்களுக்கும் கட்டுப்பட முடியாது. எதிர்ப்பை தெரிவிப்பது எமது கடமையாகும்.
நீங்கள் நாட்டின் கலாசாரத்தை மாற்றுவதாக கூறுகிறீர்கள்,புதிய கலாசாரத்தை உருவாக்குவதாக சொல்லுகிறீர்கள்.ஏன் உங்களுக்கு தெரியாதா?இந்நாட்டின் பராம்பரிய கலாசாரம் ஒன்றுள்ளது.
உங்கள் சிறு பராயத்தில், இது தொடர்பிலான அறிவு உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.உங்களுக்கு பிள்ளைகள் இல்லை.எனது பிள்ளை எங்கு படிப்பது,தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விடயங்கள் உங்களுக்கு புரியாது.
ஆனால் எங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.நீங்கள் ஏற்படுத்த போகும் கலாசாரம் ஒரினச்சேர்க்கையா அல்லது LGBTQ என்றவாறான சமூகமா உங்களின் எதிர்பார்ப்பு. ஜனாதிபதி உறுதியாக மகாசங்கத்தினர் மத்தியில் தெரிவித்த கருத்தை,நீங்கள் மாற்றவா?நினைக்கிறீர்கள்?இந்த நாட்டின் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது.'' என தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
