பொலித்தீன் பைகளுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்
வர்த்தக நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு குறைந்தபட்ச விலை ரூ.10 அறவிட வேண்டும் என ஜீரோபிளாஸ்டிக் இயக்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2025 நவம்பர் 1, முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுற்றுச் சூழலில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியாது எனவும் இயக்கம் எச்சரித்துள்ளது.
இலவச பொலித்தீன் பைகள்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு இலவச பொலித்தீன் பைகளை வழங்குவதை இடைநிறுத்துமாறே அதிவிசேட வர்த்தமானி குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்கையளவில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், குறைந்தபட்ச சட்டப்பூர்வமான விலை நிர்ணயிக்கப்படாத ஒழுங்குமுறையால் இது சாத்தியப்படாது என ஜீரோபிளாஸ்டிக் ஆலோசனை சபை குறிப்பிட்டுள்ளது.
நிலையான குறைந்தபட்ச விலை இல்லாததால், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு ரூபாய் அல்லது இரண்டு என்ற பெயரளவு கட்டணத்திற்கு பைகளை விற்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
விலை மிகக் குறைவாக இருந்தால், நுகர்வோர் வழக்கம் போல் பைகளை தொடர்ந்து கோருவார்கள், மேலும் பல்பொருள் அங்காடிகள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்று பைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அவற்றை விற்பனை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டக்கூடும்.
குறைந்த விலை
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொலித்தீன்களை குறைக்க நுகர்வோர் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த குறைந்த விலை போதுமானதாக இருக்காது என்று குழு நம்புகிறது.
நடைமுறையில் சாத்தியங்களை ஏற்படுத்துவதற்காக, ஜீரோ பிளாஸ்டிக்ஸ் இயக்கம் அரசாங்கத்திடம் மூன்று முக்கிய கோரிக்கைகயை வர்த்தமானியில் திருத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
1.ஒரு பைக்கு குறைந்தபட்சம் ரூ. 10 என்ற குறைந்தபட்ச விலையை வரையறுக்க பரிந்துரைக்கிறது.
2.இந்தக் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்துவது தொடர்பான முழு வெளிப்படைத்தன்மை.
3.மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை விரிவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
