இலங்கையில் சொந்த வீடுகளை எதிர்பார்த்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் ஒன்பது இலட்சம் குடும்பங்கள் வசிப்பதற்கு சொந்த வீடுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தேசிய வீடமைப்பு மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு சொந்த வீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் ஆயிரத்து முந்நூறு குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒரே நாளில் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடன் திட்டம்
மேலும், இந்த ஆண்டு, தேசிய வீடமைப்பு மேம்பாட்டு அதிகாரசபையின் உதவித் திட்டத்தின் கீழ் மூவாயிரத்துக்கும் (3000) மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன.
மேலும் கடன் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு( 2500 ) வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri