இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு - பல நாடுகளுக்கு அனுப்பிய கோரிக்கைகள்
2025, ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு நான்கு, சிங்கப்பூருக்கு மூன்று, இந்தியா, அமெரிக்கா, ஹொங்காங், இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு தலா இரண்டு என்ற அடிப்படையில், புலனாய்வு கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.
குறித்த பிரிவு அண்மையில் வெளியிட்ட வருடாந்த, புள்ளிவிபரங்கள் இதனை தெரிவிக்கின்றன.
கோரிக்கை
இந்த பிரிவு, பிரான்ஸ், பெல்ஜியம், பின்லாந்து, கனடா, ஸ்பெயின், இந்தோனேசியா மற்றும் மடகஸ்கருக்கு தலா ஒரு கோரிக்கையையும் அனுப்பியுள்ளது.
அதேநேரம், இந்த புலனாய்வு பிரிவு, பங்களாதேஷிலிருந்து இரண்டு மற்றும் நியூசிலாந்து, இந்தியா மற்றும் நெதர்லாந்திலிருந்து தலா ஒரு புலனாய்வு கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாக தரவு காட்டுகிறது.
மத்திய வங்கியின், புலனாய்வு கோரிக்கைகள் என்பது பணமோசடி அல்லது பயங்கரவாத நிதியுதவி போன்ற சந்தேகத்திற்கிடமான நிதி நடவடிக்கைகளை விசாரிப்பதை நோக்கமாகக் கொண்ட வங்கி போன்ற நிறுவனங்கள் அல்லது சட்ட அமுலாக்கத்திடமிருந்து பெற்ற தகவல்களுகான முறையான கோரிக்கைகளாகும்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
