மகிந்த - கோட்டாபய- பசிலை கதிகலங்க வைத்த நீதிமன்றம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என்று மகிந்த ராஜபக்ச- கோட்டாபய ராஜபக்ச- பசில் ராஜபக்ச ஆகியோரின் பெயர்களை நீதிமன்றம் வலியுறுத்தியிருந்த நிலையில், அவர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்களா? இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறு அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் சமூக மாற்றத்தின் ஊடாகதான் அதனை முன்னெடுக்க முடியும் என்றுகொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
குறித்த தீர்ப்பின் பின்னர் இலங்கை சமூகம் அவர்களை எவ்வாறு நடத்தியது என்பதை பார்க்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இதனை பற்றி கருத்து வெளியிட்டார்களே தவிர தற்போது அது மறக்கப்பட்டு விட்டது என் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...