கரூர் துயரசம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு! விஜய் எடுத்துள்ள முக்கிய முடிவு..
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக த.வெ.க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் திகதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
த.வெ.க. தலைவர் விஜய்
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்பிணைகேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
முக்கிய முடிவுகள்
பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார்.
மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர். அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
