ஈரான் வெளியுறவு அமைச்சர், கட்டார் பிரதமருக்கு அவசர தொலைபேசி அழைப்பு
கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani (முகம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானிக்கு), ஈரான் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi (அப்பாஸ் அராக்சி) அவசர தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கட்டார் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துக்கள் மட்டுமே இலக்காகக் கொண்டதாக ஈரான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஷேக் முகம்மது உறுதியாக நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி உரையாடலின் போது, “தரையிலுள்ள உண்மைகள் தெளிவாக காட்டுவது என்னவெனில், தாக்குதல்கள் கட்டார் நாட்டுக்குள் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளைத் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக Hamad International Airport (ஹமாத் சர்வதேச விமான நிலையம்) சுற்றுவட்டாரப் பகுதிகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள தொழிற்பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என கட்டார் பிரதமர் வலியுறுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செயல்கள் “கட்டாரின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான மீறலும், சர்வதேச சட்டக் கோட்பாடுகளின் மீறலும் ஆகும்” என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam