அதிகாலை தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்: ஒருவர் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (05) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (05) காலை 05.25 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 30,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் மற்றும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த சிகரெட் பெட்டிகளை 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
