கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை
த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
SIT குழு அதிகாரிகளாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்.பி விமலா ஐபிஎஸ், CSCID எஸ்.பி சியாமளாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முதற்கட்ட விசாரணை
இத்தகைய சூழலில் அக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தடயவியல் துறை அதிகாரிகள், மூன்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மொத்தமாக 8 பேர் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை கரூர் சென்ற சிறப்பு புலனாய்வு குழு முதற்கட்டமாக சம்பவ இடத்திலிருந்து விசாரணையை துவங்கியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அப்பகுதி மக்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 59 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
