அரசாங்கத்திற்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய விமல்: தொடரும் அழுத்தம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு பொலிஸார் அழைப்பானை விடுத்துள்ளனர்.
.நாளை (06.10.2025) காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
“பெலியத்தே சனா” எனப்படும் நபர் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பிலான உண்மைகளை விசாரிக்க இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்
ஜனாதிபதி அநுர அண்மையில் தென் மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது புவக்தன்டாவே சனா என்ற நபரின் வீட்டுக்கு சென்றதாகவும் அங்கு உணவு உட்கொண்தாகவும் விமல் வீரவன்ச தகவல் வெளியிட்டிருந்தார்.
பாரிய போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் குறித்த சனா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமல் வீரவன்சவின் குற்றச்சாடடு அடிப்படையற்றது என பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களை திசை திருப்பும் வகையிலும் போலியான தகவல்களை வெளியிட்டமைக்காக விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
