5 வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தி என கூறியவர்கள் நெருக்கடி காலத்தில் எங்கிருந்தனர்...! ஹரின் கேள்வி
ஐந்து வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகக் கூறும் தலைவர்கள் நாட்டில் நெருக்கடி வந்த காலத்தில் எங்கிருந்தனர்? என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று(17) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீ லங்கா’ பொதுக்கூட்டத்திலேயே அமைச்சர் ஹரின் பெனாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் உரிமைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இப்போது இலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர். ஆனால் இலங்கையின் “வன் மேன்” என்று ரணில் விக்ரமசிங்கவை மட்டுமே சொல்ல முடியும். அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்திய தலைவராகவும் அவரே உள்ளார்.
நாடும் நாட்டு மக்களின் பிள்ளைகளும் முன்னேறும் அதேநேரம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியமானது.
சிலிண்டர் பற்றி பலரும் பல விடயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் அதனை மிஞ்சிய சின்னம் கிடைக்காது. அதனைக் கண்டவுடன் கடந்த இரு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் நினைவில் வர வேண்டும்.
பசியில் வாடிய மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
சஜித் பிரமேதாசவின் சின்னம் பழைய தொலைபேசியாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வே இலங்கைக்கு புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இன்று திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவோர் திசைகாட்டியை இயக்கவும் ரணில் விக்ரமசிங்க இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இணைய வசதி தேவை என்பதை மறந்துவிடக்கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
