முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் முதல் பிரசாரத்தை ஆரம்பித்த தமிழ் பொது வேட்பாளார்
ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளார் பா அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரசாரத்தினை ஆரம்பித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்றையதினம் (18.08.2024) மாலை 3 மணியளவில் இந்த பிரசாரக்கூட்டம் இடம்பெற்றது.
திர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக மக்கள் மத்தியில் பிரசார நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக முன்னெடுத்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி
இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுதூபிக்கு பொது சுடரேற்றி வழிபட்டு தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் மற்றும் அவரோடு இணைந்து உறுப்பினர்கள் தேர்தலுக்கான முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மேலும், முல்லைத்தீவு - வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பலர் கலந்துகொண்டுள்ளார்.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில்
இடம்பெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம்
சித்தார்த்தன் , செல்லம் அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் யாழ் மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள்
கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி
எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும்
கலந்துகொண்டுள்ளனர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam